238 ஈரானியர்கள் தாயகம் திரும்பினர்.

15.04.2026 14:58:42

அமெரிக்கப் தாக்குதலில் காயமடைந்த நிலையில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டு, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 238 ஈரானியப் பிரஜைகள் விசேட விமானம் மூலம் நேற்று (14) இரவு மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஈரானுக்குச் சொந்தமான 'மெராஜ்' விமான சேவைக்கு (Meraj Air Line) சொந்தமான IRAN-09 என்ற விசேட விமானம், 13  ஆம் திகதியன்று மாலை 4:00 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.

வெலிசர தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 206 ஈரானியர்களும், கொக்கலை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த 38 ஈரானியர்களும் பலத்த பாதுகாப்புடன் இந்த விமானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, குறித்த 238 பேரையும் ஏற்றிக்கொண்ட விசேட விமானம், 14 ஆம் திகதியன்று நேற்று இரவு 8:35 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து ஈரானிலுள்ள பெயரிடப்படாத விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.