நாம் தமிழர் கட்சியினர் கைது!
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவி வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு திமுகவை கண்டித்து பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்துவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதை மீறி இன்று நாம் தமிழர் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.