ஏமனில் தாக்குதல் 30 வீரர்கள் பலி

30.08.2021 05:51:13

மத்திய கிழக்கு நாடான ஏமனில் ராணுவ தளம் மீது ஏவுகணை மற்றும் 'ட்ரோன்' ஆகியவை வாயிலாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 30 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஏமன் ராணுவ செய்தி தொடர்பாளர் முகமது அல் நயீப் கூறியதாவது:ஏமனில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடக்கிறது. லஜ் மாகாணத்தில் உள்ள அல் அனத் விமானப் படை தளத்தின் மீது ஏவுகனை மற்றும் ட்ரோன் வாயிலாக நேற்று கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 30 வீரர்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த 65 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.கடந்த 2014ல் இருந்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.