கமல்ஹாசனை இயக்க ஆசை.

07.06.2025 00:26:10

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள படம் தக் லைஃப். ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  ரவி கே சந்திரன் இசையமைத்துள்ளார். இன்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.
 

ஆனாலும் முதல் நாளில் இந்த படம் 19 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. எதிர்மறை விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்துள்ள இயக்குனர் அமீர் தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
 

அதில் “எப்போதும் கமல் சார் படம் ரிலீஸானால் முதல் நாள் முதல் காட்சி நான் மதுரையில்தான் பார்ப்பேன். கமல் சாரை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அது நடக்குமா என்பதை அவரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன். இருமுறை நான் அவரிடம் இதுபற்றி பேசியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.