வங்காளதேசத்தில் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதல்

21.03.2022 15:30:39

வங்காளதேசத்தில் பயணிகள் படகு ஒன்றை சரக்கு கப்பல் இடித்து மூழ்கடித்ததில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.தலைநகர் டாக்கா அருகே உள்ள சித்தாளட்சியா ஆற்றில் உள்நாட்டு சரக்கு மற்றும் பயணிகள் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. நேற்று வேகமாக வந்த ஒரு சரக்கு கப்பல் கட்டுப்பாட்டை இழந்து 60 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த படகின் மீது மோதியது.

மோதிய வேகத்தில் சரக்கு கப்பல் பயணிகள் படகினை சிறிது தூரம் இழுத்துச் சென்று மூழ்கடித்துவிட்டது. அருகே உள்ள படகுகள் மற்றும் கப்பலில் இருந்தவர்கள் அபாயக் குரல் எழுப்பியதை அடுத்து சரக்கு கப்பல் நிறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் பயணிகள் படகு முற்றிலுமாக மூழ்கிவிட்டது. ஆற்றில் தத்தளித்த பயணிகளின் பெரும்பாலானோர் நீந்தி கரை சேர்ந்தனர். இருப்பினும் 2 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக வங்கதேச அதிகாரிகள் கூறியுள்ளனர்.விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.