"மத கஜ ராஜா" முதல் நாள் வசூல்!
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 12 வருடங்களுக்கு பிறகு வெளியான இந்த திரைப்படத்தில் சந்தானத்தின் காமெடியால் தியேட்டருக்கு ரசிகர்கள் படையெடுத்துள்ளனர். இந்தப் படம் ஒரு நாளில் எவ்வளவு வசூல் பெற்றிருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மதகஜராஜா திரைப்படம் 2012ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, 2013ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாகவில்லை. |
இதையடுத்து, 12 வருடங்களுக்கு பின் இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி உள்ளது. இப்படத்தில், விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி, மயில்சாமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். படத்தின் கதை: விஷால் தன்னுடைய 3 நண்பர்கள் சந்தானம், சடோகோப்பன் ரமேஷ், நிதின் சத்யாவுடன் பள்ளி வாத்தியார் மகள் திருமணத்திற்கு செல்கின்றர். அப்போது, தன் மனைவியை விரைவில் விவாகரத்து செய்யப்போவதாக சொல்கிறான். இதனால்,விஷால் சந்தானத்தை மனைவியுடன் சேர்த்துவைக்கிறார். அதே போல, சடோகோப்பன் ரமேஷ், நிதின் சத்யா இருவருமே அதிகாரம் படைத்த மீடியா தொழில் அதிபரான சோனுசூட்-ஆல் பாதிக்கப்பட்டதை தெரிந்து கொண்டு. தனது நண்பர்களுக்காக சோனு சூட்-ஐ எதிர்க்க விஷால் கிளம்புகிறார். கடைசியில் விஷால் தன் நண்பர்களை பிரச்சனையிலிருந்து மீட்டாரா இல்லையா என்பது தான் மதகஜராஜா திரைப்படத்தின் மீதிக்கதை. முதல் நாள் வசூல் இவ்வளவா: இப்படத்தை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். படம் 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருந்தாலும், இது பழைய படம் போல இல்லாமல் நல்ல நகைச்சுவை திரைப்படமாக இருக்கு என்கின்றனர். மேலும், சந்தானம் தற்போது ஹீரோவாகி விட்டதால், அவரது காமெடியை ரசிகர்கள் மிஸ் செய்தனர். ஆனால்,இந்த திரைப்படத்தில் சந்தானம் வயிறு வலிக்க சிரிக்க வைத்து இருக்கிறார் என படம் பார்த்தவர்கள் கருத்துக்களை கூறியுள்ளனர். இப்படம், முதல் நாள் வசூல், சுமார் ரூ.5 கோடி வரை இருக்கும் எனக்கூறப்படுகிறது. இனி தொடர்ந்து பொங்கல் விடுமுறை என்பதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. |