தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ளுங்கள் –

19.07.2021 10:46:24

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொரோனாவை வெற்றிக்கொள்வதற்கு தடுப்பூசி ஒன்றே ஆயுதம் எனக் கூறிய அவர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

அதேநேரம் நாட்டில்  இதுவரை 40 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.