உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை

23.10.2021 05:44:07

முறைக்கேடுகளில் ஈடுபடும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு எதிராக, ஆளுநர்களால் உரிய ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொறுப்பான பிரதிநிதிகள் முறைகேடாக செயற்படுவதால், உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு குந்தகம் ஏற்படும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய தேவைப்பாடுகளை அந்தந்த கட்சிகளின் செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்ல தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன், அவரவர் அதிகாரங்களுக்கமைய உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர்களுக்கு அறிவிக்கவும், நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.