
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்!
தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு, தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தினர். |
அத்துடன், இந்தியாவை மீறி மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்துவிட முடியாது எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்தநிலையில், மக்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கக்கூடிய வகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை பழைய முறையில் நடத்த வேண்டும் என, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் கோரியுள்ளார். இதேவேளை, மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். |