வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதா?

07.06.2025 00:22:28

வெற்றிமாறன் மற்றும் சூர்யா இருவரும் கூட்டணி சேர்வதாக அறிவிக்கப்பட்ட படம் வாடிவாசல். அறிவிப்பு வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருக்கிறது. இந்த படத்தின் மீது அதிகம் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மட்டும் பேட்டிகளில் 'இந்த படம் இப்போது தொடங்கும்.. அப்போது தொடங்கும்' என தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் ஷூட்டிங் தொடங்கிய பாடில்லை.

இந்நிலையில் தற்போது வாடிவாசல் படம் டிராப் ஆகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே நடிகர் சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக அறிவித்து விட்டார்.

லக்கி பாஸ்கர் பட இயக்குனரான வெங்கி அட்லுரியின் அடுத்த படத்திற்காக சூர்யா தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். விரைவில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அதனால் அவர் வாடிவாசல் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கவில்லை எனவும், அதனால் படம் டிராப்பாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து தானு தயாரிப்பிலேயே வேறொரு படம் இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் சிம்பு நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.