விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்கள்
10.01.2024 16:01:38
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமாக விஜயகாந்த் அவர்களுக்கு கலைஞர்களால் இன்று அவரது நினைவிடத்தில் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நடிகர்களைப் போன்று வேடமணிந்து மகிழ்ச்சிப்படுத்தும் கலைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்களை போன்று வேடமணிந்து வந்த கலைஞர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளமை நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளதோடு இணையத்திலும் வைரலாகி வருகின்றது.