VAT வரியை வைத்து மக்களை ஏமாற்றுவோருக்கு கடுமையான தண்டனை

10.01.2024 16:00:41

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல் VAT செலுத்துவதாக கூறி நுகர்வோரை ஏமாற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

 

நிதியமைச்சில் நேற்று (09) இடம்பெற்ற விசேட VAT விழிப்புணர்வு மாநாட்டில் கலந்து கொண்ட போது நிதி இராஜாங்க அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நுகர்வோருக்கு போலியான உண்டியல்களை வழங்கி போலியான இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், எதிர்காலத்தில் வரி தளத்தை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் நேரடி வரி சதவீதம் 40வீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.