2 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை: முதல்வர் மு.க.ஸ்டாலின்

07.11.2021 14:40:37

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1070 என்ற அவசர எண்ணை தொடர்பு கொள்ளலாம். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.