பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக வதந்திகளை பரப்புவோருக்கு சிறை

13.01.2022 05:28:48

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தவறான தகவல்களை அல்லது வதந்திகளை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கேலி செய்யும் சில சமூக ஊடக பதிவுகளைக் கண்டறிந்தமையை அடுத்தே இந்த தண்டனையை அமீரகத்தின் அவசரநிலை, நெருக்கடி ஆணையகம் அறிவித்துள்ளது.

இந்த குற்றங்களுக்காக குறைந்தபட்சம் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் மற்றும் 100,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படலாம் என்று அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தவறான செய்திகள் அல்லது வதந்திகள் அரச அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்களின் கருத்தை தூண்டுவோருக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 200,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.