மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை

08.07.2023 16:47:18

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லால் சலாம்'.கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகர்கள் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், "மனிதநேயத்தை விட பெரிய மதம் எதுவும் இல்லை" என்று 'லால் சலாம்' படப்பிடிப்பு தளத்தில் இருந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.