விடாமுயற்சி ஷூட்டிங்கைக் கண்டுகொள்ளாத அஜித்
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதனால் அஜித் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ள நிலையில் அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம்.
இதற்காக அனைத்து நடிகர்களின் கால்ஷீட்டையும் பட நிறுவனம் வாங்க, அஜித் ஷூட்டிங்கை கண்டுகொள்ள மறுக்கிறாராம். அதற்குக் காரணம் லைகா நிறுவனம் மாதாமாதம் அஜித்துக்கு தரவேண்டிய சம்பள பணமான 5 கோடி ரூபாயைக் கொடுக்கவில்லையாம். அதைக் கொடுத்தால்தான் ஷூட்டிங் வருவேன் என அஜித் பிடிவாதமாக இருக்கிறாராம்.