''புறநானூறு'' படம் ட்ராப் ஆனது ஏன்? வெளியான தகவல்

26.03.2024 00:19:41

சுதா கொங்கரா- சூர்யா கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதாக இருந்த புறநானூறு படம் தற்காலிகமாக கைவிடப்பட்டதற்காக காரணம் வெளியாகியுள்ளது.
 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் இந்தியில் சூரரைப் போற்று படத்தை அக்‌ஷய் குமார் வைத்து தயாரித்து வருகிறார். இப்படத்தை சுதாகொங்கரா இயக்கி வருகிறார்.
 

அதேசமயம், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்திலும் சூர்யா  நடித்துள்ளார். சமீபத்தில்  இப்பட டீசர் வெளியான  நிலையில், விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு சுதா கொங்கரா- சூர்யா கூட்டணி இரண்டாவது முறையாக இணைவதாக இருந்த புறநானூறு படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், இப்படம் டிராப் ஆனதாக கூறப்படுகிறது.
அதாவது, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையாக வைத்து இப்படம் எடுக்கப்பட  வேண்டும் ;ஆனால் அக்காலத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பதால் அவர்களுக்கு எதிராக காட்ட சூர்யா விரும்பாததால் இந்த சூழ்நிலைக்கு இப்படத்தை கைவிட்டதாகக் கூறப்படுகிறது.