அமெரிக்கா உயிரியல் பூங்காவில் 2 கழுதைப்புலிக்கு கொரோனா
அமெரிக்காவில் உள்ள டென்வர் உயிரியல் பூங்காவில் அதிக எதிர்ப்பு சக்தியுடன் வாழக்கூடிய இரு கழுதைப்புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே கழுதைப்புலியும் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இதற்கு முன், சிங்கங்கள், புலிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது கழுதைப்புலியும் பாதி்க்கப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்காவில் உள்ள 22 வயதான கோஸி, 23 வயதான கிபோ ஆகிய இரு கழுதைப்புலிகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இரு கழுதைப்புலிகளுக்கும் அடிக்கடி இருமல், மூக்கில் சளிவருதல், சோர்வாக இருத்தல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
டென்வர் உயிரியியல் பூங்காவில் உள்ள சிங்கங்கள், புலிகளுக்கு முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அதன்பின் மற்றவிலங்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கழுதைபப்புலியும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது என்று தேசிய கால்நடை சேவை ஆய்வகம் தெரிவித்துள்ளது.