அமெரிக்காவை சீரழித்துவிட்டார் ட்ரம்ப்.

17.04.2025 07:55:59

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றதையடுத்து  பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.  குறிப்பாக ட்ரம்ப் அண்மையில் விதித்த புதிய வரிக்கொள்கை உலகநாடுகள்  மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில் தமது ஆட்சிக்காலம் நிறைவடைந்த பின்னர் முதல் முறையாக  முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன்  அண்மையில் உரையொன்றை நிகழ்த்தினார்.

இதன்போது ”  ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் அமெரிக்க அரசாங்க நிர்வாகத்தை டொனால்ட் ட்ரம்ப் சீரழித்து விட்டார்” என    ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

அத்துடன்  அவசர அவசரமாக ட்ரம்ப் கொண்டுவந்த மாற்றங்களால், அமெரிக்கர்களுக்கு கிடைக்கப்பெறும் சலுகைகளும்  பாதிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை பேரழிவுகளை ட்ரம்ப் அரசு கொண்டுவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப்  போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும்  நிலையில்  சீனாவின் இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.