“நான் எங்கிருந்தாலும், குவாத்தமாலா மக்களின் நலனுக்காக நான் தொடர்ந்து பணியாற்றப் போகிறேன்”

25.07.2021 11:00:00

 

குவாத்தமாலா ஊழல் தடுப்பு வழக்கறிஞர் ஜுவான் பிரான்சிஸ்கோ சாண்டோவால் நாட்டை விட்டு வெளியேறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன் நாட்டின் மிக சக்திவாய்ந்த காம்பசினோ குழுக்கள் திங்கட்கிழமை பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

குவாத்தமாலா சிறப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வரை தலைமை தாங்கிய சாண்டோவால் சனிக்கிழமை அதிகாலையில் சால்வடோர் எல்லைக்கு தப்பி ஓடிவிட்டார் என நாட்டின் மனித உரிமை ஒம்பூட்ஸ்மேன் ஜோர்டான் ரோடாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது உயிரைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் மனித உரிமை ஒம்பூட்ஸ்மேன் ஜோர்டான் ரோடாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை சால்வடோர் எல்லைக்கு சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள பிரான்சிஸ்கோ சாண்டோவால், “நான் எங்கிருந்தாலும், குவாத்தமாலா மக்களின் நலனுக்காக நான் தொடர்ந்து பணியாற்றப் போகிறேன்” என கூறியுள்ளார்.