கண் பார்வையற்றவருக்கு காரில் இருந்து இறங்கி உதவிய வாலிபர்
இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த போது சாலையின் நடுவே பார்வையற்ற ஒருவர் ஸ்டிக்கை வைத்து கொண்டு தட்டுதடுமாறி நடந்து வருவதை பார்க்கிறார். டுவிட்டரில் வைரலாகி வரும் வீடியோவை பார்த்த பயனர்கள் வாலிபரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விபத்துக்களில் சிக்கி ஒருவர் துடித்து கொண்டிருப்பதையும் கூட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு மத்தியில், சாலையில் பாதுகாப்பாற்ற முறையில் சென்ற பார்வையற்ற ஒருவருக்கு காரில் இருந்து இறங்கி ஒரு வாலிபர் உதவி செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Powered By PauseUnmute Loaded: 1.56% Fullscreen இந்த சம்பவம் அமெரிக்காவின் டென்வர் நகரில் நடந்துள்ளது. வீடியோவில், இளைஞர் ஒருவர் காரை ஓட்டி வந்த போது சாலையின் நடுவே பார்வையற்ற ஒருவர் ஸ்டிக்கை வைத்து கொண்டு தட்டுதடுமாறி நடந்து வருவதை பார்க்கிறார். பார்வையற்ற அந்த நபர் நடைபாதையை கண்டுபிடிக்க திணறுவதை பார்த்த வாலிபர் காரை நிறுத்திவிட்டு இறங்கி சென்று பார்வையற்றவருக்கு நடைபாதையில் நடக்க உதவி செய்கிறார். மேலும் அந்த பார்வையற்றவர் அருகில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதை கேட்டறிந்து அவருக்கு வழிகாட்டுவது போன்ற காட்சிகள் பயனர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. டுவிட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் அந்த வாலிபரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.