வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்
சென்னை: அனில் கட்ஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம், ‘சபரி’. மகரிஷி கொண்ட்லா வழங்க, மஹா மூவிஸ் சார்பில் மகேந்திர நாத் கொண்ட்லா தயாரித்துள்ளார். வரும் மே 3ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வருகிறது.
வரலட்சுமி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, ‘விவா’ ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி, அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேஷா, பேபி கிருத்திகா நடித்துள்ளனர்.
சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில், ஆக்ஷன் காட்சிகளில் வரலட்சுமி சரத்குமார் டூப் இல்லாமல் துணிச்சலுடன் நடித்துள்ளார். சன்னி நாகபாபு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார். ரஹ்மான், மிட்டபள்ளி சுரேந்தர் பாடல்கள் எழுதியுள்ளனர்.