மத்திய வங்கியின் ஆளுநராக போகும் தமிழர் !

25.05.2022 17:26:59

நிதியமைச்சராக இன்று ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநரில் மாற்றம் ஏற்படலாம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு பதிலாக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திரஜித் குமாரசுவாமி இலங்கை தமிழர் அவர், இவர் கொழும்பு றோயல் கல்லூரி, இங்கிலாந்து ஹரோ பள்ளி ஆகியவற்றில் கல்வி கற்று பின்னர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சசெக்சு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார்.

மத்திய வங்கியின் பதினான்காவது ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி ஜூலை 2016 இல் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இவர் ரணில் மற்றும் மைத்திரியின் நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1974 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் அதிகாரியாக சேர்ந்த இந்திரஜித் குமாரசுவாமி மத்திய வங்கியின் புள்ளியியல் மற்றும் வங்கி மேற்பார்வை துறைகளில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.