வாரிசு நடிகருக்கு கோலாகலமாக திருமணம்

28.11.2022 11:09:01

 நவரச நாயகன் நடிகர் கார்த்திக் இன் மகன் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கெளதம் கார்த்திக் , என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினார். அத்துடன் நவம்பர் 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர்.

இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

 

அதன்படி, இன்று விமர்சையாக கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனனின் திருமணம் நடைபெற்றுள்ளது.

அழகிய ஜோடியின் புகைப்படம் திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பலரும், திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.