வெளிநாடு செல்ல அனுமதித்தது மிகப்பெரிய தவறு

20.02.2022 12:21:00

கடந்த  2019-ஆம் ஆண்டு இறுதியில் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரீப்புக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், இதுவரை பாகிஸ்தான் திரும்பவில்லை. 

 

இந்த நிலையில், நவாஸ் ஷெரீப்பை வெளிநாடு செல்ல அனுமதித்தது மிகப்பெரிய தவறு என இம்ரான் கான் ஒப்புதல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான் கான் கூறியதாவது;   

 

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நவாஸ் ஷெரிப்பால் ஒரு நாள் கூட உயிர் வாழ முடியாது என்று தனது அரசு கருதியது. அவரை வெளிநாடு செல்ல அனுமதித்ததன் மூலம் தாங்கள் மிகப்பெரிய தவறை செய்துவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம்”என்றார்.