ஜம்மு காஷ்மீர் சட்ட சபை தேர்தல்;

18.09.2024 08:05:44

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு புதன்கிழமை (18) ஆரம்பமாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும்.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 24 சட்டசபை தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் 16 இடங்கள் காஷ்மீர் பிராந்தியத்திலும், 8 இடங்கள் ஜம்மு பிராந்தியத்திலும் உள்ளன.

ஜம்மு – காஷ்மீரில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்ட தோ்தல் அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்டம்பா் 18-ஆம் திகதியும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பா் 25 ஆம் திகதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஒக்டோபா் 1-ஆம் திகதியும் தோ்தல் நடத்தப்படவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அக்டோபா் 8 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்தும், காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன.