எரிபொருள் விலையை பாதியாக குறைப்பதாக வாக்குறுதி!
13.09.2024 08:24:26
ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் தெரிவு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை 50 வீதத்தால் குறைப்பதாக உறுதியளித்துள்ளார். |
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய அவர், VAT வரியை 10% ஆக குறைப்பதாகவும் உறுதியளித்தார். இந்த பொருளாதார நடவடிக்கைகளை தனது பிரச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக நிலைநிறுத்தி, மக்கள் மீதான நிதிச்சுமையை இலகுபடுத்துவதே தனது முன்னுரிமை என ரணசிங்க கூறினார். |