‘வாட்ஸ்-அப்’ கணக்குகள் முடக்கம்!

02.03.2022 10:16:44

கடந்த ஜனவரி மாதம் மட்டும் 18,58,000 கணக்குகளை முடக்கியுள்ளதாக வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இத்தனை கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் வாட்ஸ்-அப்பின் கொள்கைகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதிக அளவில் உண்மைக்கு புறம்பான மெசேஜ்களை ஃபார்வெர்ட் செய்தது, அச்சுறுத்தும் வகையில் வாட்ஸ்அப்பில் தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணங்களால் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

 

இதுபோல உங்களின் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கப்பட்டால், வாட்ஸ்-அப் சப்போர்ட்டை தொடர்புகொண்டு, நம் கணக்கின் ஆதாரத்தை சமர்பித்தால்,  பின்னர் மீண்டும் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும்.