இரண்டு தடுப்பூசிகளை போட்டவர்களே பஸ்ஸில் பயணிக்கலாம் !

29.07.2021 06:13:00


தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் தனியார் பேருந்துகளில் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அதற்குப் பின்னர், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, பயணத் தடை தளர்த்தப்படும் பட்சத்தில், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கு மாத்திரமே பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் நோய் பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.