இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நியமனங்களை எதிர்த்து குரல்!

07.10.2025 14:11:29

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கான அரச நியமனத்தை எதிர்த்து, எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், சாணக்கியன் இராசமாணிக்கம், தயாஸ்ரீ ஜயசேகர ஆகியோர் இன்று (07) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

 

அரசாங்கத்தினால் அண்மையில் வழங்கப்பட்ட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம் குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், இந்நியமனம் சுதந்திரத்தையும் நியாயத்தையும் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

மேலும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், சாணக்கியன் இராசமாணிக்கம், தயாஸ்ரீ ஜயசேகர ஆகியோர் கருத்து தெரிவித்த போதிலும், எதிர்க்கட்சியைச் சார்ந்த ஏனைய உறுப்பினர்கள் மௌனமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.