உதயநிதி துணை முதல்வரா.?

05.08.2024 09:31:19

உதயநிதியை துணை முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதி வீனஸ் நகர் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். 
 

தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முதல்வரிடம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளதே தவிர பழுக்கவில்லை என்று தெரிவித்தார்.

சென்னையில் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளதாகவும், மழைப்பொழிவு எந்த அளவில் இருந்தாலும் தமிழக அரசு அதை எதிர் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்


மேலும் பருவ மழைக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.