Aditya L1: சூரிய பயணத்தில் இந்தியா சாதனை

06.01.2024 15:28:00

இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையமான Aditya L1 (ஆதித்யா-எல்1) விண்கலம் இன்று (ஜன. 6) ஹாலோ ஆர்பிட்டின் எல்1 (Halo Orbit's L1 Point) என்ற அதன் இலக்கை அடைந்து ஒரு பெரிய மைல்கல்லை எட்டியது. ஆதித்யா-எல்1 விண்கலத்தை எல்1 புள்ளியைச் சுற்றி ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கான இறுதிச் செயல்பாடுகளை இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்படுத்தியது. மேலும், இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அவரின் X பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.