போதை ஊசி, மாத்திரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை
19.05.2023 07:41:38
ஈரோட்டில் போதை மாத்திரை பயன்படுத்தி விற்றதாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதை ஊசி, மாத்திரை பயன்படுத்துவது, கள்ளச்சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சரும், டி.ஜி.பி.யும் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர். போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் யாருக்கும் துணையாக இல்லை.