
இளவரசி.. ப்ளீஸ்
08.07.2022 11:00:00
மணிரத்னம் இயக்கியுள்ள "பொன்னியின் செல்வன்-1" படத்தின் போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.