பூத் கமிட்டி அமைக்காத அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை... எடப்பாடி பழனிசாமி திட்டம்
04.01.2024 07:31:21
பாராளுமன்ற தேர்தலை முழு வேகத்துடன் சந்திக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.
பா.ஜனதாவுடன் கடைசி நேரத்தில் கூட்டணி வரலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் திருச்சி வந்த பிரதமர் மோடியை சந்திக்காமல் தவிர்த்ததன் மூலம் கூட்டணிக்கான வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கூட்டணி அமைப்பதற்கான அதிகாரத்தை பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் வழங்கினார்கள். கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் தங்கள் பக்கம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.