காதலன் மீது பிக் பாஸ் ஜூலி போலீசில் புகார்

04.12.2021 06:43:11

திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக காதலன் மீது பிக் பாஸ் ஜூலி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பரங்கிமலையை சேர்ந்த மரியா ஜூலியானா தந்த புகாரில் அமைந்தகரையை சேர்ந்த காதலன் மனிஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

4 ஆண்டுகளாக காதலித்த மனிஷ் திருமணம் செய்வதாக கூறியதால் ரூ.2.30 லட்சம் வரை செலவு செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.