திரிபோஷா நிறுவனம் வெளிட்ட அறிவிப்பு..!

04.08.2022 09:48:44

 

எதிர்வரும் சில வாரங்களில் குழந்தைகளுக்கு தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்ய முடியும் என இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தேவையான திரிபோஷாவை இந்த வாரத்திற்குள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்கள் ஊடாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

திரிபோஷா பொதிகள் உற்பத்தி

இதேவேளை, பாலூட்டும் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்குத் தேவையான சுமார் 720,000 திரிபோஷா பொதிகளை தற்போது தயாரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்