வடக்கு ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்!
22.12.2025 15:43:16
வடக்கு ரயில் மார்க்கம், ரயில் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாளை மறுதினம் (24) முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி ரயிலை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்தேவி ரயிலில் முதலாம் வகுப்பு (குளிரூட்டப்பட்ட) மற்றும் இரண்டாம் வகுப்பு ஆசனங்களை முற்பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.