சேரங்கோடு நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு
20.08.2021 11:25:22
சேரங்கோடு நீர்பிடிப்புப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வேளாண் பொறியியல் துறை மூலம் சேரங்கோடு நீர்ப்பிடிப்பு பகுதியில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
தடுப்புச்சுவர் மற்றும் கம்பி வலை தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை தரமான முறையில் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது கூடலூர் உதவி செயற்பொறியாளர் பூபாலன் உடனிருந்தார்.