ஐவர் உயிரிழப்பு : 100 பேர் வைத்தியசாலையில் அனுமதி

30.03.2024 08:00:00

ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு kobayashi pharmaceutical நிறுவனத்தில் beni-koji supplements எனும் கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

கடந்த 22ஆம் திகதி இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனினும் கடந்த ஒரு வாரத்தில் பெனிகோஜி மருந்துகளை எடுத்துக்கொண்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

குறித்த நிறுவனம் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்து மொத்த சந்தைக்கு விநியோகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.