500 மில்லியன் டொலர் உதவி அறிவித்துள்ள கனடா

12.07.2024 08:00:20

வோஷிங்டன் உச்சிமாநாட்டில் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் உக்ரேனிய(Ukraine) அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும்(Volodymyr Zelenskyy) இடையிலான இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது.

 

அதனை தொடர்ந்து கனடா ஏற்கனவே உறுதியளித்த மற்றும் நன்கொடையாக வழங்கிய 4 பில்லியன் டொலர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்கு மேல் கூடுதல் பணம் கிடைத்துள்ளது.

மேலும், மேற்கத்திய போர் விமானங்களை ஓட்ட கற்றுக் கொள்ளும் உக்ரைன் விமானிகளுக்கு பயிற்சியை விரிவுபடுத்துவதாகவும் கனடா தெரிவித்துள்ளது

நேட்டோ உச்சி மாநாட்டில் நீர்மூழ்கிக் கப்பல்களை மாற்றும் திட்டத்தை கனடா உறுதிப்படுத்துகிறது.

பின்னர் இதுகுறித்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ட்ரூடோ, ''நேட்டோவில் ஜெலென்ஸ்கியுடன் நான் பகிர்ந்துகொண்ட பதிவில், உக்ரைனின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், ரஷ்யாவிற்கு எதிராக தங்கள் வானத்தை பாதுகாக்கவும், உக்ரேனிய போர் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவும், 500 மில்லியன் இராணுவ ஆதரவுடன் வலுப்படுத்த கனடா திட்டமிட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.