வான்கூவர் பொது நூலகத்தில் கத்திக்குத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு

28.03.2021 09:10:13

வான்கூவர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பொது நூலகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய மேலதிக விவரங்கள் எதுவும் பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை.

பொலிஸார் கைது செய்வதற்கு முன்னர் குறித்த நபர் கத்தியால் தன்னைத் தானே காயப்படுத்திக்கொண்டமை காணொளிகளின் முலம் தெரியவந்துள்ளது.