போட்டோ சூட் வீடியோவை வெளியிட்ட அதிதி சங்கர்

30.10.2021 04:22:21

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி சங்கர், முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக மதுரை தமிழை முறையாக பேச கற்றுக்கொண்டு பக்கா கிராமத்து பெண்ணாகவே மாறி நடித்து வருகிறார் அதிதி.

மேலும், அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த முதல் படமான பருத்திவீரனில் பிரியாமணி நடித்தது போன்ற வெயிட்டான ஹீரோயினியாக அதிதி நடிப்பதாக கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் அதிதி, தற்போது தான் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோ சூட் வீடியோவையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.