ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் அதிக வெப்ப அலையால் சுமார் 1,600பேர் உயிரிழப்பு !

22.07.2022 12:44:30

இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகளால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஐரோப்பாவில் வெப்ப அலை இதுவரை ஸ்பெயின் மற்றும் போர்த்துகலில் சுமார் 1,600 பேரின் உயிரைக் கொன்றுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில், ஸ்கொட்லாந்தில் 35.1 டிகிரி செல்சியஸ் மற்றும் வேல்ஸில் 37.1 என வரலாற்று வெப்பப் பதிவுகள் பதிவாகின. ஜேர்மனியின் ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரமும் அதன் வரலாற்றில் முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை பதிவாகியது.

ஐரோப்பாவின் பரப்பளவை உள்ளடக்கிய பரந்த வெப்ப அலை நேற்று (வியாழக்கிழமை) சீராக கிழக்கு நோக்கி நகர்ந்தது. இதனால், இத்தாலி, போலந்து மற்றும் ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட அதிக வெப்ப நிலையால் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 30,000பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஐரோப்பா 1757ஆம் ஆண்டுக்குப் பிறகு அதி தீவிர வெப்ப நிலையை எதிர்கொண்டுள்ளது.