
இண்டிகோ விமானம் மீண்டும் சென்னை திரும்பியது!
20.06.2025 14:36:57
வெள்ளிக்கிழமை (20) காலை மதுரைக்குச் சென்ற இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட 30 நிமிடங்களில் சென்னைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
60 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு இண்டிகோ விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 7:55 மணிக்குப் புறப்பட்டது.
எனினும், பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஒரு தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்த குழுவினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தைத் திருப்ப முடிவு செய்தனர்.
விமானம் சென்னையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
மேலும் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இடமளிக்கவும், மதுரைக்கு பயணத்தைத் தொடரவும் மற்றொரு விமானம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகளும் விமான நிறுவன அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர்.