ஜேர்மனியில் இடிந்து விழுந்த முக்கிய பாலம்!
ஜேர்மனியில் கான்கிரீட் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பெரும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிழக்கு ஜேர்மனியின் Dresden பகுதியில் அமைந்துள்ள Carola பாலத்தின் ஒருப்பகுதி Elbe நதியில் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, ஆனால் எதிர்வரும் மணி நேரங்களில் பாலத்தின் மற்ற பகுதிகளும் இடிந்து விழுவதற்கான அதிகமான சாத்தியங்கள் இருப்பதாக உள்ளூர் தீயணைப்பு துறையினர் எச்சரித்துள்ளனர். |
இப்பகுதியின் முக்கிய போக்குவரத்து பாதையாக இருந்த பாலம் சேதமடைந்துள்ளதை தொடர்ந்து, பொதுமக்கள் போக்குவரத்து தாமதத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பாலம் இடிந்து விழுந்ததன் காரணமாக நகரின் வெப்பமூட்டும் குழாய்களும் சேதமடைந்துள்ளன. மேலும் நகரின் டிராம் அமைப்பிற்கான பயணமும் முற்றிலுமாக தடைப்பட்டுள்ளது. இது விபத்து என்றும், இதில் எந்தவொரு சதி திட்டமும் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இடிந்து விழுந்த பாலமானது கிழக்கு ஜேர்மனியின் கம்யூனிச காலத்திற்கு முந்தையது என்றும், பாலம் குளோரின் அரிப்பு காரணமாக இடிந்து விழுந்து இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். |