பேக்கரி பொருட்களின் விற்பனை சரிவு

18.03.2024 14:58:20

பேக்கரி பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் சேர்மானங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால், பாண் போன்ற பேக்கரி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரர் பத்திரிகைக்கு அவர் கருத்து  தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவுக்கு ரூ. 50 ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது, முட்டையின் விலை அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ வெண்ணெக்கு ரூ.6,000 வரி விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பேக்கரி பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், பாண் விற்பனை 40 சதவீதத்தால் குறைந்துள்ளது, மற்ற பேக்கரி பொருட்களின் விற்பனை 25 சதவீதத்தால் குறைந்துள்ளது. மேலும், பாண் தவிர பேக்கரி பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 10 வீதமான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும், மின் கட்டணம் 21.9 வீதத்தால் குறைக்கப்பட்ட போதிலும், பேக்கரி உரிமையாளர்கள் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்கவில்லை எனவும் விதானகே தெரிவித்தார்.