ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு

08.04.2024 07:00:00

புதுடெல்லி: சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் உலகின் முதல் 3டி பிரிண்டட் செமி கிரையோஜெனிக் ராக்கெட்டை உருவாக்கி உள்ளது. அக்னிபான் என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் மூலம் 300 கிலோ எடையுள்ள ஆய்வுக் கலன்களை சுமார் 700 கிமீ புவி சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த ராக்கெட்டின் முதல் ஏவுதல் முயற்சி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் கடந்த மார்ச் 22ம் தேதி நடக்க இருந்தது.

ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் நேற்று முன்தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 92 வினாடிகளுக்கு முன்பாக தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் ராக்கெட் ஏவுதல் நிறுத்தப்பட்டது. கோளாறை சரி செய்யும் பணி நடக்கிறது