இளமையாகவே இருக்க வேண்டுமா...

22.01.2023 14:58:12

இளமையாகவே இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் ஆசைதான்.

அதிகமானோர் இளமையாகவே இருக்க வேண்டும் என்பதற்காக இரசாயனப் பொருட்கள் மற்றும் கிரீம்கள் என்பனவற்றை பயன்படுத்துகின்றனர்.

இதனால் விரைவில் பலன் கிடைப்பதோடு பாதகம் விளைவிக்கும் பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் இயற்கையான இளமை ரகசியங்களில் நெல்லிக்காய் முக்கியமான இடத்தில் உள்ளது.

பொதுவாக நெல்லிக்காய் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களை கொண்டது என்பது தெரியும்.

குறிப்பாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் நெல்லிக்காய் தோல் பராமரிப்பிலும் பெரிதும் பயன்படுகின்றது. குறிப்பாக வயதான தோற்றத்தை தவிர்க்க நெல்லிக்காய் தயிர் சேர்த்த ஃபேஸ் மாஸ்க் உங்களுக்கு பெரிதும் உதவும்.

அந்தவகையில் இதனை எப்படி செய்வது என்பதை இங்கே பார்க்கலாம்.

தேவையானவை

  • பசுந்தயிர் - 4 டீஸ்பூன்
  • நெல்லிக்காய் பொடி - 2 டீஸ்பூன்

செய்முறை

சிறிய கிண்ணத்தில் தயிர் எடுத்து அதில் நெல்லிக்காய் பொடியை சிறிது சிறிதாக கலக்கவும். பேஸ்ட் பதத்துக்கு இருக்கட்டும். இதை 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

முகத்தினை நன்றாக கழுவியபின் தயிர் நெல்லிபொடி கலந்த கலவையை முகத்தில் கழுத்துப்பகுதியில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

முகத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும். முகத்தில் குளிர்ந்த நீரை அடிக்க செய்யலாம்.

வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வந்தால் விரைவில் அற்புதமான மாற்றங்களை சருமத்தில் பார்க்கலாம்.