விஜய் போலவே சைக்கிளில் சென்று வாக்களித்த விஷால்

20.04.2024 07:03:00

தளபதி விஜய் கடந்த தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்த நிலையில் இந்த தேர்தலில் நடிகர் விஷால் சைக்கிளில் சென்று வாக்களித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..
 

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
 

குறிப்பாக திரையுலக பிரபலங்கள் பலர் வாக்களித்து வருகிறார்கள் என்பதும் அவர்கள் வாக்களித்த போதும் வாக்களித்த பின்னர் அளித்த பேட்டிகளும் ஊடகத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
 

இந்த நிலையில் நடிகர் விஷால் இன்று வாக்களிக்க கருப்பு டீசர்ட்  அணிந்து சைக்கிள் ஓட்டியபடி சென்னை அண்ணா நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். அதன்பின் அவர் தனது வாக்கை பதிவு செய்து செய்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
 

விஜய் கடந்த தேர்தலில் சைக்கிளில் சென்று வாக்களித்த நிலையில் அவரைப் போலவே விஷாலும் சைக்கிளில் சென்று வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அவர் சமூக வலைதளத்தில் தன்னுடைய ஜனநாயக கடமையை தான் ஆற்றிவிட்டதாகவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.